×

சென்னையில் 108 ஆம்புலன்ஸை இயக்க மறுத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!: போதிய ஓய்வு வழங்கப்படவில்லை என வேதனை!!!

சென்னை: போதிய ஓய்வு வழங்கப்படவில்லை என கூறி சென்னையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் அருகே 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 50 ஆம்புலன்ஸ் வாகனங்களை முன்னிறுத்தி சுமார் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்காலிக பணி நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அதிகப்படியான தொற்று பரவல் இருந்ததன் காரணமாகவும், அதிகப்படியான ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இல்லாததன் காரணமாகவும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் சிக்கல் நீடித்தது.

 இதனை தொடர்ந்து, ஜூன் 1ம் தேதி வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு  சுமார் 120 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தற்காலிக பணிக்காக வரவழைக்கப்பட்டனர். ஊழியர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வீதத்தில் 26 வேலைநாட்கள் பணி செய்ய வேண்டும் எனவும், அதன் பின்னர் தங்களுக்கு மாவட்டங்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டுவர் எனவும் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து 26 வேலைநாட்கள் முடிவு பெற்றும் தங்களை தங்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பவில்லை எனவும், போதிய ஓய்வு இல்லை எனவும் தெரிவித்து, ஊழியர்கள்  சென்னை பெரியமேடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களை விரைந்து தங்களுடைய மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து ஊழியர்களின் கோரிக்கையை 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் ஏற்றுக்கொண்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.



Tags : Chennai , Employees protest against refusing to run 108 ambulances in Chennai!
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...