×

இறுக்கி பிடிக்கும் கொரோனா....! வேலூரில் ஜூலை இறுதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

வேலூர்: வேலூரில் மேலும் ஒரு மாதம் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இறைச்சி கடைகள் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய தினங்களில் மட்டும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நோய்க்கு இன்னும் தடுப்பு மருத்து கண்டுப்பிடிக்காததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு நேற்று ஊரடங்கை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இந்த ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகளை தமிழக அரசு அளித்துள்ளது. இதற்கான அரசாணையை இன்று வெளியிடப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1,308 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 340 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 964 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பதித்து இது வரை வேலூரில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் வேலூரிலும் கொரோனா பாதிப்பு அதிவேகத்தில் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை ஜூலை மாதம் இறுதி வரை நீட்டித்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள்: இறைச்சி கடைகள் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய தினங்களில் மட்டும் செயல்படும். வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே காய்கறி, மளிகை கடைகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்க்குகள் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து நாட்களில் இயங்கும். துணிக்கடைகள், நகைக்கடைகள், ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்களில் மட்டுமே இயங்கும் என மேலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Vellore , Corona, Vellore, Controls, District Administration
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...