×

சிறுபான்மையின மக்களின் தொகையைக் குறைக்கும் வகையில், உய்குர் முஸ்லிம் பெண்களுக்கு கருத்தடையை கட்டாயப்படுத்தும் சீனா!!!

பெய்ஜிங் : சிறுபான்மையின மக்களின் தொகையைக் குறைப்பதற்கு, உய்கர் பிரிவை சேர்ந்த சிறுபான்மையின பெண்களை கட்டாயப்படுத்தி கருத்தடை செய்ய அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கர் மொழி பேசுவோர் அதிகமாக வசிக்கின்றனர். இவர்கள் உய்கர் முஸ்லிம்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள், சீனாவில் சிறுபான்மையினராக கருதப்படுகின்றனர். இவர்களைத் தவிர, வேறு சில சிறுபான்மை இனத்தவரும், இந்த மாகாணத்தில் வசிக்கின்றனர். இந்த சிறுபான்மையினரின் மக்கள் தொகையை குறைப்பதற்கான முயற்சியில், சீன அரசு, கடந்த சில ஆண்டுகளாகவே, தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

உய்கர் மக்களில் சில பேரை தீவிரவாதிகள் என பட்டம் சுட்டி தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் சிறுபான்மை இன மக்கள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று சீன அதிகாரிகள் அனைத்து வீட்டிலும் தீவிர சோதனை செய்து உள்ளார். இதில் ஏதாவது ஒரு வீட்டில் இரு குழந்தைக்கு மேல் இருந்தால் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த அபராதமும் மிகவும் அதிகமாக தொகை வசூலிக்கப்படுகிறது. அதனை கட்ட முடியாதவர்களை வலுக்கட்டாயமாக தடுப்பு முகாமில் அடைத்து வைக்கின்றனர்.சிறுபான்மையின பெண்களில் யாராவது திருமணமாகி கர்ப்பமானால், அதை பற்றி தகவலை அதிகாரிளுக்கு தெரிவிக்க வேண்டும் என கட்டாயமாகியுள்ளனர். பின்னர் அவர்களுக்கு கருத்தடை செய்ய மருந்து, மாத்திரை ஆகியவற்றை அளித்து கருகலைப்பு போன்ற கொடிய செயல்களை சீனா அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த தகவலை தனியார் செய்தி நிறுவனம் செய்த ஆய்வில் தெரிவித்துள்ளார்.


Tags : China ,women ,Uighur ,minority populations , Minority population, amount, Uighur Muslim, women, contraception, forced, China
× RELATED கடலூரில் சிறுவன் இயக்கிய ஆம்புலன்ஸ் மோதி விபத்து: 2 பெண்கள் காயம்