×

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் மற்றும் கிழக்கு, மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலக வளாக நுழைவாயிலில் நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் தலைமை வகித்தர். மாவட்ட துணை செயலாளர் ரங்கநாதன் வரவேற்றார். வட்டார தலைவர்கள் முருகேசன், நிக்கோலஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களில் விலை உயர்வும் அதிகமாகிறது என கூறி, பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர்.

காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜ்குமார், புண்ணியநாதன், பக்கிரிசாமி, அம்மன் குமார், சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு காஞ்சி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜி.வி.மதியழகன் தலைமை தாங்கினார். நகர தலைவர் இராம.நீராளன் முன்னிலை வகித்தார்.இதேபோன்று வாலாஜாபாத் அடுத்த தென்னேரி இந்தியன் வங்கி எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வாலாஜாபாத் வட்டார காங்கிரஸ் தலைவர் சுகுமார் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகர காங்கிரஸ் சார்பில் செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் எதிரில் நகர காங்கிரஸ் தலைவர் ஜெ.பாஸ்கர் தலைமையில் தலைமையில் நந்தது. மாவட்ட துணை தலைவர் ஜெயராமன், மாவட்ட செயலாளர்கள் முருகன், ரியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : party protests ,Congress ,price hike ,protests , Congress protests,price hike , petrol , diesel
× RELATED வேளாண் மசோதாவை எதிர்த்து டெல்லியில்...