×

ஆசிரியர் கல்வி கட்டண நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டதால் வழக்கை முடித்துவைத்தது ஐகோர்ட்

சென்னை : தமிழகத்தில் உள்ள ஆசிரியர் கல்வி கல்லூரிகளுக்கு கட்டணங்களை நிர்ணயிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தமிழக உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது. இக்குழு, 2016 ம் ஆண்டு கல்லூரிகளின் செலவுக் கணக்கு விவரங்களைக் கேட்டு, கட்டணங்களை நிர்ணயித்தது. 2016 - 17 முதல் 2018  19 வரையிலான மூன்று கல்வியாண்டுகளுக்கு இந்த கட்டணங்கள் அமலில் இருந்தன. கடந்த 2019 - 20 முதல் 2021 - 22 ம் கல்வியாண்டுக்கான கட்டணங்களை நிர்ணயித்து கட்டண நிர்ணயக் குழு 2019 செப்டம்பர் 12ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், விதிகளை பின்பற்றி கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவில்லை எனவும், எனவே, கட்டண நிர்ணயக் குழு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் நடராஜன், சென்னை  ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்  மானோகரன் கட்டண நிர்ணயக்குழுவுக்கு தற்போது உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி  வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளதாவும். எனவே உரிய பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்றார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், கட்டண நிர்ணய குழுவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளதால் மனுதாரர் கட்டண குழுவை அணுகலாம் என வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : judge , retired judge ,tuition fee, school teachers
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...