×

ஆந்திராவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 793 பேருக்கு தொற்று உறுதி!

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 793 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா, தீவிர பெருந்தொற்றாக மாறி போனதாலும் உரிய மருந்து கண்டறியாததாலும் உலக நாடுகள் பெருவாரியான மக்களை பலிகொடுக்க வேண்டியதாயிற்று. ஆறுமாதங்கள் கடந்தும் இன்னும் இத்தொற்றின் வேகம் குறையவில்லை. இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் போன்ற மாநிலங்களில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆந்திராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாகவே உயர்ந்து வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது. ஆந்திராவில் நேற்று வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,098 ஆகவும், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 169 ஆக இருந்தது. இந்நிலையில் ஆந்திராவில் இன்று புதிதாக 793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,891 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு புதிதாக 11 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.  தற்போது வரை 7,479 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மாநிலத்தில் 6232 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Andhra Pradesh , Andhra Pradesh, Corona, Amravati
× RELATED வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்..!!