×

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதத்தில் கோயில்களுக்கு வர வேண்டிய ரூ.175 கோடி வருவாய் பாதிப்பு

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதத்தில் கோயில்களுக்கு வர வேண்டிய ரூ.175 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,121 கோயில்கள் உள்ளது. இதில், ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் வரும் கோயில்கள் மொத்தம் 234. ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் உள்ள கோயில்கள் 557. ரூ.10 ஆயிரம் முதல் 2 லட்சத்துக்குள் வருவாய் உள்ள கோயில் 3402. இக்கோயில்களின் சொத்துக்கள் மூலம் வருவாய், உண்டியல் வருவாய், தரிசன டிக்கெட்டுகள், பிரசாத விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.600 கோடி வரை வருவாய் பெறப்படுகிறது.

விழாக்காலங்களான கடந்த 3 மாதத்தில் மட்டும் பழனி முருகன் கோயிலில் ரூ.50 கோடியும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் தலா ரூ.40 கோடி திருச்செந்தூர் முருகன் கோயில் ரூ.30 கோடி, திருத்தணி முருகன் கோயிலில் ரூ.20 கோடி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ரூ.5 கோடி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ரூ.1 கோடியும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ரூ.75 லட்சம் என மொத்தம் ரூ.175 கோடி வரை வருவாய் கிடைத்திருக்கும். ஆனால், தற்போது ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் அந்த வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : temples , Corona curfew, last 3 months, temple, revenue of Rs 175 crore, impact
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு