×

கொரோனா பாதிப்பில் உலகளவில் முதலிடம்; ஊரடங்கு விதிகளை தளர்த்தியதால் இளம் தலைமுறை அதிகம் பாதிப்பு... அமெரிக்கா வருத்தம்..!!

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ள நிலையில் ஊரடங்கை தளர்த்தியதற்காக அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய COVID-19 உயிர்கொல்லி வைரஸ் 300-க்கும் மேற்பட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலையில் உள்ள அமெரிக்காவில் வேகமெடுத்துள்ள நோய்த் தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. அங்கு டெக்சாஸ், ஃப்ளோரிடா, நியூயார்க், நியுஜெர்சி உள்பட பல்வேறு பகுதிகளில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது.

இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர்க்கொல்லி வைரசுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் அங்கு சுமார் 2 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு என்றும், புதிதாக பாதித்தவர்கள் இளம் வயதினர் என்றும் அந்நாட்டு நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே புகழ்பெற்ற கொள்ளை நோயியல் நிபுணரும் வெள்ளை மாளிகை பணிக்குழுவின் முக்கிய உறுப்பினருமான ஆண்டனி ஃபாவ்சி, நோய்த்தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். அப்போது பேசிய அவர்; கொரோனாவால் அந்நாட்டின் சில பகுதிகள் கடுமையான பிரச்சனைகளை எதிர்நோக்குவதாக தெரிவித்தார்.

கொரோனாவால் நாம் இதுவரை சந்தித்திராத பிரச்சனைகளை தற்போது எதிர்நோக்கி வருகிறோம் தம்மை தனிமைப்படுத்தும் நோய்த் தொற்று மிகப்பெரிய ஆபத்தை கண்முன்னால் நிறுத்துகிறது. ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால் அவரால் சமூகம் முழுவதும் மெல்ல மெல்ல பரவத் தொடங்குகிறது. தம்மையும் அறியாமல் கொள்ளை நோய் பரவ, நோய்த் தொற்று பாதித்தவர் காரணமாகிறார் என்பதே நிசர்சனமான உண்மை. ஊரடங்கு விதிகளை தளர்த்தியதால் இளம் தலைமுறையினர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும் சில காலம் ஊரடங்கை நீட்டித்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.


Tags : half ,Corona ,Loosening ,America , Corona, curfew, vulnerability, America, regret
× RELATED துலாம்