×

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு சவரன் விலை 232 அதிகரிப்பு: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு 232 அதிகரித்தது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் இந்தியா முழுவதும் நகைக்கடைகள் மூடப்பட்டன. அன்று முதல் மே 7ம் தேதி வரை தங்கம் விலை வெளியிடப்படவில்லை. இருந்த போதிலும் உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்து  கொண்டே வந்தது.  ஊரடங்கில் தளர்வுகளுக்கு பிறகு  தமிழகத்தில் மே 8ம் தேதி முதல நகைக்கடைகள்  திறக்கப்பட்டது. திறந்திருந்த நகைக்கடையில் பெயரளவுக்கு தான் வியாபாரம் நடைபெற்றது. இந்த நிலையில் ஜூன் 19ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கையடுத்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள நகைக்கடைகள் மூடப்பட்டது.  

 கொரோனாவால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் முன்பு போல்  நடைபெறவில்லை. இருந்த நேரத்திலும் கூட கவலையளிக்கும் வகையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இப்படியே அதிகரித்து கடந்த 24ம்தேதி  தங்கம் வரலாற்றில் புதிய சாதனையை படைத்தது. அதாவது  ஒரு கிராம் தங்கம் 4,659க்கும், சவரன் 37,272க்கும் விற்கப்பட்டது. இது விலை தங்கம் வரலாற்றில் அதிகப்பட்சமான விலையாகும். தொடர்ந்து 25ம் தேதி சவரன் 36,888, 26ம் தேதி கிராம் 4,611க்கும் சவரன் 36,888க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது கிராமுக்கு 29 அதிகரித்து, ஒரு கிராம்  4,640க்கும்,  சவரனுக்கு 232 அதிகரித்து, சவரன் 37,120க்கும் விற்பனையானது. ஒரு நாள் குறைந்த தங்கம் மீண்டும் அதிரடியாக உயர்ந்து 37 ஆயிரத்தை தாண்டியிருப்பது  நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. நாளை மீண்டும் விலை உயருமா? இறங்குமா? என்பது காலையி்ல தெரியவரும்.

Tags : shock jewelry buyers , Gold, price rise
× RELATED ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத சாதனை அளவாக ரூ.2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்