×

1962ம் ஆண்டு போருக்குப் பிறகு 45,000 சதுர கிமீ அபகரித்தது சீனா: சரத்பவார் திடீர் விளக்கம்

சதாரா: சீனா தாக்குதல் விவகாரத்தில் பாஜ - காங்கிரஸ் இடையே வார்த்தை  மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றம்சாட்டினார்.  இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான சரத்பவார் நேற்று அளித்த பேட்டியில், ‘‘எல்லையில் சீன படையின் ஆக்கிரமிப்பு முயற்சியை இந்தியா தடுத்துள்ளது. இதை தோல்வியாக கருத முடியாது.  அங்கு சண்டை நடந்திருக்கிறது என்றால் நாம் விழிப்புடன் இருக்கிறோம் என்றே அர்த்தம்,’’ என்றார். ராகுல் குற்றச்சாட்டு குறித்து அவர் கூறுகையில், ‘‘1962 போருக்குப் பிறகு 45,000 சதுர கிமீ இந்திய பகுதியை  சீனா ஆக்கிரமித்தது. இப்போதும் அது சில பகுதியை ஆக்கிரமித்து இருக்கலாம். ஆனாலும், இது தேச பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விஷயம். இதை அரசியலாக்கக் கூடாது,’’ என்றார்.

Tags : China ,War , China, Sharad Pawar, BJP, Congress
× RELATED சீனாவின் டிராகன் படகுத் திருவிழா கோலாகலம்..!!