×

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்த 166 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர்

சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்த 166 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் தகவல் அளித்துள்ளார். இந்தியாவிலேயே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தான் டயாலிசிஸ் கொரோனா நோயாளிகள் அதிகம் குணமடைந்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான சிறுநீரக கோளாறு கொண்ட நபருக்கு டயாலிசிஸ் சிகிச்சையும் நோய் தொற்று சிகிச்சையும் இணைத்து வழங்கப்பட வேண்டும். இதற்காக தனியான டயாலிசிஸ் ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம்.

இந்த வசதி செய்ய முடியாத பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகளை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். சில மருத்துவமனைகளில் வசதி இருந்தாலும் கொரோனா நோயாளி இருந்தால் மற்ற நோயாளிகள் வர மாட்டார்கள் என சிகிச்சை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. டயாலிசிஸ் கொரோனா நோயாளிகளுக்கு நோய் குணமாகும் வரையில் தொடர்ந்து சிகிச்சை வழங்க சிறப்பு ஏற்பாடு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செய்யப்பட்டிருக்கிறது.



Tags : Rajiv Gandhi Gandhi Hospital ,Chennai ,Rajiv Gandhi Government Hospital ,Corona , Rajiv Gandhi Government Hospital, Dialysis, Corona
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...