×

கீழ்பென்னாத்தூர் அடுத்த நீலந்தாங்கல் கிராமத்தில் பழங்கால ஓவியம் கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் அடுத்த நீலந்தாங்கல் கிராமத்தில் பழங்கால ஓவியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த சுதாகர், கீழ்பென்னாத்தூர் தாலுகா, நீலந்தாங்கல் கிராமத்தில், ஆய்வாளர் காந்திராஜன் செயலர் ச.பாலமுருகன், பழனிச்சாமி ஆகியோர் களஆய்வு செய்தனர். அப்போது, பண்டைய கால ஓவியம் சொரட்டுக்கோள் மலை அடிவார பாறை பகுதியில்,  சிவப்பு மற்றும் வெள்ளை பூச்சுகளால் ஆன பழைய ஓவியங்கள் வரையப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது: இங்கு கிடைத்த  சிவப்புநிற ஓவியங்கள் புதியகற்கால பாணியை ஒத்துள்ளது. இந்த ஓவிய தொகுப்பிலேயே பெருங்கற்காலத்தைச் சேர்ந்த வெள்ளை நிற பூச்சுகளால் ஆன ஒவியங்களும் உள்ளன.

அதில், விலங்குகளை வேட்டையாடும் உருவம், ஆயுதம் வைத்துள்ள வேட்டையாடும் மனிதன் உள்ளிட்ட பல ஓவியங்களும், கோலம் மற்றும் எழுத்துக்களைப் போன்ற பிற்கால ஓவியங்களும்  வரையப்பட்டுள்ளன.  வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பல ஓவியங்கள் இப்பகுதியில் கிடைத்துவருகின்றன. செத்தவரை, பன்னியூர், வேட்டவலம் போன்ற புகழ்பெற்ற ஓவியங்கள் உள்ள பகுதிகளின் வரிசையில் நீலந்தாங்கல் ஒவியமும் தொல்லியல் முக்கியத்துவம் பெறுகின்றது. இது போன்ற ஓவியங்களை பாதுகாத்து, அடுத்து வரும் தலைமுறைகள் அறியும்படி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர தெரிவித்தார்.

Tags : Kilpennathur ,Neelanthangal Village ,Neelangangal , Kilpennathur, Neelangangal, Antique Painting, Invention
× RELATED கீழ்பென்னாத்தூர் அருகே சாலை...