×

6வது மாதமாக வெற்றி நடை: மணிப்பூர் மிசோரம் சிக்கிம்

புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: நாட்டில் கொரோனா தொற்று ஆரம்பக் கட்டத்தில், வடகிழக்கு மாநிலங்களில் பரிசோதனை மையங்களும், மருத்துவமனைகளும் குறைவாகவே இருந்தன. அதன் பிறகு தடுப்பு நடவடிக்கை, மருத்துவ உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட்டன. அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் தற்போது வரை 5,715 பேர் குணமடைந்து உள்ளனர். 3,731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 12 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர். சிக்கிம், மணிப்பூர், மிசோரம் மாநிலங்களில் இதுவரையில் கொரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை. ஆரம்பத்தில் வடகிழக்கு மாநிலங்களில் பரிசோதனை மையங்கள் குறைவாக இருந்ததே 12 பேர் இறக்க காரணமாக அமைந்து விட்டது.


Tags : Manipur Mizoram Sikkim , Manipur, Mizoram, Sikkim, Corona
× RELATED 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் நிவர்