×

சுங்க முகவர்களுக்கு இ-பாஸ் வழங்குவதில் கெடுபிடி!: தமிழகத்தில் முடங்கியது ஏற்றுமதி - இறக்குமதி தொழில்..பலகோடி ரூபாய் சரக்கு தேக்கம்!

சென்னை: சென்னையில் சுங்க முகவர்களுக்கு இ - பாஸ் வழங்குவதில் நிலவும் சிக்கலால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தினமும் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு கொரோனா மருத்துவ உபகரணங்கள், உயிர்காக்கும் மருந்துகள், உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இறக்குமதியாகின்றன. இதற்கான சுங்க தீர்வையை செலுத்தி பொருட்களை பாதுகாப்பாக இறக்குமதி, ஏற்றுமதி செய்வதில் 1500க்கும் மேற்பட்ட சுங்க முகமை அலுவலகங்கள் சென்னையில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இ-பாஸ் வழங்குவதில் சிக்கல் நீடிப்பதால் ஏற்றுமதி - இறக்குமதி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுங்க முகவர் ஒருவர் தெரிவித்ததாவது, அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டும் தங்களுக்கு இ - பாஸ் கிடைப்பது நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டு பெரும் இன்னல் உருவாகியுள்ளது. மேலும் நிறுவனங்களை இயக்க முடியாமலும், ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்க முடியாமலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் சென்னை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து விமானம் மூலம், இறால், மீன், மாம்பழம், மோட்டார் இயந்திர உதிரி பாகங்கள், ஜவுளி ரகங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் உள்ள 28 சரக்கு பெட்டக முனையங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான சுங்க முகவர்கள், தொழிலாளர்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Customs Agency, E-Pass, Tamil Nadu, Export - Import Industry
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...