×

காஷ்மீரில் தால் ஏரியை 2 வருடங்களாக தூய்மை செய்யும் 7 வயது சிறுமியின் கதை பாடநூலில் சேர்ப்பு : சேவையை கெளரவித்த ஹைதராபாத் பள்ளி!!

ஹைதராபாத் : காஷ்மீரில் தால் ஏரியை கடந்த 2 வருடங்களாக தூய்மை செய்து வரும் 7 வயது சிறுமியின் கதை பள்ளி பாடத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி மிகவும் பிரபலமானது. சுற்றுலாத்தளமாகவும் விளங்குகிறது. தால் ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு குப்பைகளை வீசி அசுத்தம் செய்கின்றனர். இதனால் ஏரியின் அழகு பாதிக்கப்பட்டதை பார்த்து வருத்தமடைந்த 7 வயது சிறுமி ஜன்னத், தனது தந்தையுடன் இணைந்து ஏரியை சுத்தப்படுத்தி வருகிறார். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவதற்காக அவர் இந்த சேவையில் கடந்த 2 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார். படகு ஒன்றில் ஏரியில் செல்லும் அவர், குப்பை கூளங்களை வலைகளை கொண்டு வெளியே எடுத்து சுத்தம் செய்கிறார்.

இந்த சிறு வயதில் சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வரும் இவரது செயலை அங்கீகரிக்கும் வகையில், ஐதராபாத் நகரில் உள்ள பள்ளியொன்று ஜன்னத்தின் கடந்த கால வாழ்க்கை மற்றும் அவரது சேவை ஆகியவற்றை, மாணவர்கள் படிக்கும் பாடநூலில் சேர்த்து உள்ளது. இதனை படிக்கும் மாணவர்களுக்கு அது முன்மாதிரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில், பாடப்புத்தக்கத்தில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து அந்த சிறுமி ஜன்னத் கூறுகையில் ‘‘எனது தந்தை தால் ஏரியை சுத்தம் செய்வார். அவரால் ஈர்க்கப்பட்டு, நானும் அந்த செயலை தொடங்கினேன். எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் அங்கீகாரம் எல்லாம் என்னுடைய தந்தைக்குரியது’’ என்றார்.

Tags : School of Hyderabad ,Dal Lake ,Kashmir , Kashmir, Dal Lake, 2 Years, Purity, 7 Years, Daughter, Story, Textbook, Addition, Service, Honor, Hyderabad, School
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!