×

அனுமதி இல்லாமல் நடந்த திருமண விழா: அபராதம் விதித்து எச்சரிக்கை

பெரம்பூர்: பட்டாளம் கான்ரான்ஸ்மித் நகரில் உள்ள தேவிகருமாரியம்மன் கோயிலில் 100க்கும் மேற்பட்ட உறவினர்கள் முன்னிலையில் தனிமனித இடைவெளி உள்ளிட்ட எந்த வித அரசு உத்தரவையும் கடைபிடிக்காமல் விஜய், நந்தினி என்ற தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. இது தொடர்பாக அப்பகுதியினர் சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து அங்குவந்த ஓட்டேரி போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் திருமண தம்பதியினரின் பெற்றோரை அருகில் உள்ள மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகத்தில் வரவழைத்து விசாரித்தனர்.

இதில் எந்த வித முன் அனுமதியும் பெறாமல் திருமணம் நடத்து முடிந்தது தெரியவந்ததை தொடர்ந்து, திருமண வீட்டாருக்கு ₹5000 அபராதம் விதித்த மாநகராட்சி உதவி பொறியாளர் சரஸ்வதி இந்த நிகழ்வில் கலந்து கொண்ட யாருக்கேனும் தொற்று ஏற்பட்டால் திருமண வீட்டார் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எழுதி வாங்கியதோடு அவர்களை கடுமையாக எச்சரித்தனர். இதில் கலந்து கொண்டவர்களின் பெயர் மற்றும் விலாசங்களை சேகரித்து அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Wedding Ceremony , Permission, wedding ceremony, fine
× RELATED திரைப்பட படப்பிடிப்பை தொடங்க அனுமதி...