×

சிபிஎல் தொடர் விலகினார் கேல்

செயின்ட் லூசியா: கரீபியன்  பிரிமீயர் லீக் (சிபிஎல்) டி20 தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஆண்டு விலகுவதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கேல் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு சிபிஎல் தொடர் பூட்டிய அரங்குகளில் ரசிகர்கள் இல்லாமல் டிரினிடாட் மற்றும் டொபாகாவில் மட்டும் நடைபெற உள்ளது. ஆக.18ம் தேதி  முதல் செப் 10ம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டியில் 6 அணிகள் விளையாட உள்ளன. செயின்ட் லூசியா அணியில் இடம் பெற்றுள்ள கேல் (40), ‘தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஆண்டு சிபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன்’ என்று திடீரென அறிவித்துள்ளார். ‘எனது விலகல் குறித்து  செயின்ட் லூசியா அணி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து விட்டேன். ஊடரங்கு காரணமாக என் குடும்பத்தினைரை சந்திக்க முடியவில்லை.

இப்போது கிடைக்க உள்ள வாய்ப்பை குடும்பத்தினருடன் செலவிட முடிவு செய்துள்ளேன்’ என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே  ஜமைக்கா தல்லவாஸ், செயின்ட் கிட்ஸ், நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ள கேல், ஜமைக்கா அணியில் இருந்தபோது 2 முறை சிபிஎல் கோப்பையை வெல்ல காரணமாகவும் இருந்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் தல்லவாஸ் வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்தற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் அவர் செயின்ட் லூசியா அணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. சிபிஎல் தொடரில் இதுவரை கேல் 2354 ரன் குவித்து முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Cpl , Cpl series, quit, gal
× RELATED செயின்ட் கிட்ஸ் அணியில் ராயுடு