×

ஓசூரில் வியாபாரி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு.: தட்டிக்கேட்ட வியாபாரி மகனுக்கு கத்திக்குத்து

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூரில் வியாபாரி வீடு மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதுடன் தட்டிக்கேட்க வந்த வியாபாரியின் மகனை கத்தியால் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் அப்துல் கலாம் நகரை சேர்ந்த அக்பர் பாஷா தனது வீட்டுக்கு அருகிலையே மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அவர் வீட்டு முன்பு குடிபோதையில் தள்ளாடி கீழே விழுந்தனர்.

அப்போது அங்கு வந்த அக்பர் பாஷா யாரு நீங்கள் என் எங்கு வந்திர்கள் என்று கேட்டதால் அவர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. மேலும் இதனை தட்டிக்கேட்ட  அக்பர் பாஷாவின் மகனை மர்மநபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் மர்மநபர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் நேரில் சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்க சென்ற போது மர்மநபர்கள் இதுபோன்ற செயலில் ஈடுப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Tags : dealer ,house ,Hosur ,blast , Petrol, blast ,dealer's, house ,Hosur.
× RELATED சென்னையில் கஞ்சா வாங்குவது போல் நடித்து கஞ்சா வியாபாரியை பிடித்த போலீஸ்