×

இரண்டு சோதனைகளையும் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி காண்போம்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தேசம் இன்று இரண்டு சோதனைகளை எதிர்கொண்டுள்ளது. ஒருபுறம் கொரோனா என்ற கொடிய தொற்று நோய் தாக்கம், மறுபுறம் அண்டை நாடுகளான சீனா, மற்றும் பாகிஸ்தான் நாடுகள் எல்லை மீறுதல்களும், மறைந்திருந்து தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றன. இன்றைய இந்த இரு பிரச்னைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும், தலைவர்களும், மக்களும் இனம், மதம், மொழி கடந்து இணைந்து செயல்பட வேண்டும். எந்த சோதனைகளையும் சந்திக்கும் வல்லமை கொண்டது இந்தியா என்பதை நிரூபிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி காண்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : GK Vasan , Two Trial, GK Vasan
× RELATED எள் நியாயமான விலையில் கொள்முதல் செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்