×

ரூ1000 நிவாரண தொகையை ரேஷன் கடை, தெருக்களில் கொடுத்தால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: முதல்வர் அறிவித்துள்ள ரூ1000 நிவாரண தொகையை தெருக்களில் வைத்து விநியோகம் செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) அந்தோணிசாமி ஜான்பீட்டர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மண்டல இணை பதிவாளர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும்போது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தகுதியுடைய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ1000 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த பணம் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதி ரூ1000ஐ ரேஷன் கடைகளில் வைத்தோ அல்லது தெரு பகுதிகளில் கூட்டத்தை கூட்டியோ விநியோகம் செய்யக்கூடாது. குடும்ப அட்டைதாரர்களது வீடுகளுக்கே நேரடியாக சென்று விநியோகம் செய்ய வேண்டும். இதனை கண்காணிக்க தவறுகின்ற, சார்நிலை கண்காணிப்பு அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். நியாயவிலை கடைகளை திறந்து விநியோகம் செய்யும் கடை பணியாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Relief Amount, Ration Shop, Street, Tamil Nadu Government
× RELATED நிவாரண நிதி முறைகேட்டில்...