×

கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகம் செய்தது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் : 7 நாட்களில் 100% நோயாளிகளை குணமடைந்ததாக அறிவிப்பு!!

டெல்லி: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் 7 நாட்களில் கொரோனா தொற்று காணாமலே போய்விடும் என்று பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் பதஞ்சலியின் கொரோனா மருந்து ஏற்கனவே சுமார் 1000 பேரை குணப்படுத்தியிருக்கிறது என்றும்  இன்னும் 5 அல்லது 7 நாட்களில் தரவுகள் மற்றும் ஆதாரங்களுடன் எங்களின் மருந்தை வெளியிடுவோம் என்றும் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா கூறியிருந்தார்.

அதன்படி, இன்று கொரோனில் ஸ்வாசரி.என்ற பெயரில் கொரோனா நோயை குணப்படுத்த புதிய மருந்தை ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாத்திரை அடங்கிய பாக்கெட் ரூ. 600- க்கு கிடைக்கும்.  2- 2 மாத்திரைகளை உணவு உண்ட 30 நிமிடங்களுக்கு பிறகு சுடுநீரில் கலந்து  சாப்பிட வேண்டும். இது 15 முதல் 80 வயது வரை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய அளவு. 6 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் இதில் பாதி எடுத்துக் கொண்டால் போதுமானது என்று பதஞ்சலி நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஹரித்துவாரில் நடந்த நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் கூறுகையில், இந்த மருந்து 280 நோயாளிகளிடத்தில் பரிசோதிக்கப்பட்டது. முதல் 3 நாட்களில் 69 % கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர். 7 நாள்களில் அனைத்து நோயாளிகளும் 100 சதகிவிதம் குணமடைந்தனர். இந்த மருந்தை கொடுத்து  பரிசோதித்த .நோயாளிகளில் ஒருவர் கூட இறக்கும் நிலை ஏற்படவில்லை. பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்துடன் சேர்ந்து ஜெய்ப்பூரிலுள்ள தேசிய மெடிக்கல் சயின்ஸஸ் நிறுவனத்தை சேர்ந்த ( நிம்ஸ்) 500 விஞ்ஞானிகள் இணைந்து இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு இந்த மாத்திரையைக் கண்டுபிடித்துள்ளனர். அஸ்வகந்தா, துளசி கலவையிலிருந்து தயாரிக்கப்படும் கொரோனில் மருந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கான முதல் சான்று அடிப்படையிலான ஆயுர்வேத மருந்து ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Patanjali Institute Introduces Coronavirus Drugs Baba Ramdev ,Patanjali Institute Introduces Coronavirus Drugs , Corona, Drug, Quality, Source, Patanjali, Bhagir, Information
× RELATED ஒரே நாளில் 10,089 பேர் பலி: உலகளவில்...