×

கொரோனாவின் தலைநகராக உருமாறும் சென்னை: ராயபுரம், தண்டையார்பேட்டை,தேனாம்பேட்டையில் பாதிப்பு 5,000-ஐ தாண்டியது; இன்று மட்டும் 18 பேர் பலி!!

சென்னை, : சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 5,000-ஐ தாண்டியது. சென்னை மாநகராட்சியின் 11 மண்டலங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தற்போது வரை 42,752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 23,756 பேர் குணமடைந்துள்ளனர். 623 பேர் உயிரிழந்துள்ளனர். 18,372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 1094 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 60.22 சதவீதம், பெண்கள் 39.78 சதவீதம்.

மண்டலம் வாரியாக பார்க்கும்போது, ராயபுரத்தில் 6,484 பேர், தண்டையார்பேட்டையில் 5,227 பேர், தேனாம்பேட்டையில் 5,110 பேர், கோடம்பாக்கத்தில் 4,649 பேர், அண்ணாநகரில் 4,585 பேர், திருவிக நகரில் 3,628 பேர், அடையாறில் 2,531 பேர், வளசரவாக்கத்தில் 1,784 பேர், திருவொற்றியூரில் 1,587 பேர், அம்பத்தூரில் 1,601 பேர், மாதவரத்தில் 1,135 பேர், ஆலந்தூரில் 965 பேர், பெருங்குடியில் 884 பேர், சோழிங்கநல்லூரில் 808 பேர், மணலியில் 624 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் சென்னையில் மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5, ஸ்டான்லியில் 3,ஓமந்தூரார் மருத்துவமனையில் 5, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

Tags : Chennai ,capital ,Corona ,Royapuram , Chennai, Corona, Royapuram, Hunting
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...