×

வாகனம் ஓட்டும் மக்களுக்கு 16வது நாளும் ‘சுபகாரியம்’ பெட்ரோல், டீசல் விலை பரிசளிப்பு

சென்னை: தொடர்ந்து 16வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தாலும், இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை கடந்த 7ம் தேதி முதல் உயரத் தொடங்கியது. நேற்றும் 16வது நாளாக இவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் கடும் அதிருப் அடைந்துள்ளனர்.  சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 82.87 ரூபாய் என்றும், டீசல் விலை லிட்டருக்கு 76.30 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் லிட்டர் பெட்ரோல் 82.58 ரூபாய்க்கும், டீசல் 75.80 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில் நேற்று, லிட்டர் பெட்ரோல் 29 காசுகளும், டீசல் விலை 50 காசுகளும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 16 நாட்களில் அதாவது ஜூன் 7ம் தேதி முதல் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 7.33 ரூபாய் விலை உயர்ந்தும், டீசல் லிட்டருக்கு 8.08 ரூபாய் விலை உயர்ந்தும் விற்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் மத்திய அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிப்பால் தொழில்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு மக்கள் வருமானம் இல்லாமல் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், பெட்ரோல், டீசல் விலை இப்படியே உயர்ந்து கொண்டு சென்றால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் என்றும் அஞ்சுகின்றனர். எனவே, விலை உயர்வை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Subakariyam ,motorists , Vehicle, Superior, Petrol, Diesel, Price Gifted
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...