×

பண்ருட்டி அருகே திடீர் பரபரப்பு; அரசு பேருந்தில் பயணம் செய்த தம்பதிக்கு கொரோனா

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து வடலூர் நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் வடலூரை அடுத்த ஆபத்தானபுரத்தை சேர்ந்த கணவன், மனைவி உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். மேல்மாம்பட்டு என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, தம்பதியின் செல்போனில் சுகாதாரதுறையினர் தொடர்பு கொண்டு, இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியான தகவலை தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் பேருந்தை நிறுத்த கூறி கூச்சலிட்டனர். கொரோனா உறுதி செய்த தகவலை கூறி இறங்கி விட்டனர். இதனால் பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் பீதியில் அலறியடித்துகொண்டு பேருந்தை விட்டு இறங்கி சிதறி ஓடினர். அந்த தம்பதியை சுகாதார துைறையினர் விரைந்து வந்து மருத்துவமனை அழைத்து சென்றனர்.


Tags : Outbreak ,Corona ,Panruti ,couple trips , Panorutti, State Bus, Corona for the couple
× RELATED தமிழகத்தில் இன்று மேலும் 1,663 பேருக்கு...