×

அரசின் தனிமைப்படுத்துதல் முகாம்களில் கட்டமைப்புகளை வலுப்படுத்த ரூ.16.6 கோடி

* ஒரு நாள் உணவுக்கு ரூ.250 செலவு செய்ய அறிவுரை
* தமிழக அரசு உத்தரவு

சென்னை: அரசின் தனிமைப்படுத்துதல் முகாம்களில் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த ₹16 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களில் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்படும் நபர்கள் உடன் இருக்கும் உறவினர்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருப்போர் சில நேரங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக, கொரோனா பரிசோதனை முடியும்  வரை தனிமைப்படுத்தப்படுகின்றனர்.  அதே போன்று ஒரு இடத்தில் மற்றொரு இடத்திற்கு  செல்பவர்களும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் பரிசோதனை முடியும் வரை அங்கேயே தங்க வைக்கப்படுகின்றனர். இந்த கொரோனா தனிமைப்படுத்துதல் முகாம்களில் போதிய அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, கழிவறை, தண்ணீர் உள்ளிட்ட எந்தவொரு வசதியும் செய்து தரப்படவில்லை. இதனால், தனிமைப்படுத்துதல் முகாம்களில் தங்க வைக்கப்படுபவர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மதுரை மாவட்டங்களில் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்கும் மக்களுக்கான உணவு, உறைவிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த ₹16.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் தற்காலிக மருத்துவமனைகளில் எலக்ட்ரிக்கல் பணி, போக்குவரத்து செலவு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ₹3.87 கோடியும், செங்கல்பட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் கட்டணம் மற்றும் போ்க்குவரத்து செலவு,  தனிமைப்படுத்துதல் முகாம் கட்டணம் ₹1.10 கோடி, மதுரையில் தனிமைப்படுத்துதல் முகாம்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது, போக்குவரத்து செலவு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம் என ₹93.89 லட்சம்,  ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் போக்குவரத்து செலவு, தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கான செலவு  உட்பட ₹75 லட்சம் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு கோவிட் பாதுகாப்பு மையத்தில் உணவு செலவுக்கு ₹10 கோடி என மொத்தம் ₹16.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்துள்ள தனிமைப்படுத்துதல் முகாமுக்கு வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Tags : isolation camps ,state , Rs.16.6 crore ,strengthen, state's, isolation camps
× RELATED வீட்டு வாசலில் உறங்கியவர்கள் மீது...