×

இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 55.49% ஆக அதிகரிப்பு; நாட்டில் இதுவரை 2.27 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்: மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15, 413 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,10,461 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 306 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 13,254-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் விகிதம் 55.49% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாடு முழுவதும் நாள்தோறும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,90,730 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது.

இதுவரை மொத்தமாக 68,07,226 பேருக்கு மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை, 2,27,755 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 13,925 கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் மீட்பு விகிதம் தற்போது 55.49 சதவீதமாக உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.


Tags : India ,home , India, Healing Rate, Central Government
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு