×

முழு ஊரடங்கு வாகன சோதனையில் ரூ.1 கோடியுடன் பிடிபட்ட வாலிபர்: ஹவாலா பணமா என விசாரணை

சென்னை: முழு ஊரடங்கு வாகன சோதனையின்போது பாரிமுனையில் ரூ.1 கோடி பணத்துடன் வாலிபர் ஒருவர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஹவாலா பணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சென்னையில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக நேற்று முன்தினம் முதல் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் பாரிமுனை, சேவியர் தெரு பிரகாசம் சாலை சந்திப்பில் முத்தியால் பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் பைக்கில் வேகமாக வந்த வாலிபர் ஒருவரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது அவரது வாகனத்தில் கட்டு கட்டாக பணம் இருந்தது. அதில் ரூ.99 லட்சத்து 50ஆயிரம் பணம் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மண்ணடி நைனியப்பன் தெருவை சேர்ந்த நத்தர் சாஹிப்(35) என்பது தெரியவந்தது. மண்ணடி பவளக்காரன் தெருவை சேர்ந்த ரியல் எஸ்ேடட் தொழில் செய்யும் இர்பான் என்பவர் கொடுத்தனுப்பிய இந்த பணத்தை தையப்பன் தெருவில் போய் நின்றால் ஒருவர் வாங்கி கொள்வார் என்று கூறி கொடுத்து அனுப்பியது தெரியவந்தது. அங்கு போகும் வழியில் போலீசாரிடம் நத்தர் சிக்கினார். இந்த பணம் ஹவாலா பணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.



Tags : curfew test ,Investigation , Young man , Rs 1 crore,full curfew test,hawala money
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...