×

கல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடும் சீனா.. இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்ததே தாக்குதலுக்கு காரணம் எனவும் புகார்!!

பெய்ஜிங் : லடாக் மோதலால் எல்லையில் ஏற்பட்ட பதற்றம் தணியாத நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு தங்கள் நாட்டிற்கே சொந்தம் என்று சீனா உரிமைக் கொண்டாடி உள்ளது. எல்லையில் இரு நாட்டு வீரர்கள் மோதிக் கொண்டது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருக்கிறது. மோதல் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு தங்கள் எல்லைக்குள் இருப்பதாக கூறியுள்ள சீனா, தங்கள் நாட்டு ராணுவம் அந்த பகுதியில் பல ஆண்டுகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் இந்தியா சாலைக் கட்டமைப்புகளை அமைத்து வருவதாகவும் சீனா குற்றம் சாட்டியிருக்கிறது. இந்திய வீரர்கள் அத்துமீறி தங்கள் எல்லைக்குள் நுழைந்து ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டதே தாக்குதல் நடைபெற காரணம் என்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் ராணுவ வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசிடம் வலியுறுத்தி இருப்பதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு நாட்டு அதிகாரிகள் இடையேயான 2ம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்றும் எல்லையில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. 


Tags : China ,Calvanon Valley ,valley ,attack ,Kalvan ,soldiers ,Indian , Calvan, Valley, Ownership, Right, China, Indian Warriors, Violence
× RELATED தத்தனூர் கீழவெளியில் பெயர் இல்லை...