×

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை எதிர்த்து போலீஸ் மனு: ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி போலீசார் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
 கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பட்டியல் இனத்தவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு பின்னர் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

 கடந்த மாதம் ஆர்.எஸ்.பாரதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, அவருக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.


Tags : RS Bharathi ,DMK , Judgement ,RS Bharathi,Bail cancellation,Postponed
× RELATED மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு...