×

சடலத்தை ஆய்வு செய்யக்கோரிய விவகாரம்: தெலங்கானா உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தெலங்கானா மாநிலத்தில் வைரஸ் தொற்று எண்ணிக்கையும், இறப்பு விகிதத்தையும் குறைத்துக் காட்ட அரசு முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்த அம்மாநில உயர் நீதிமன்றம் தெலுங்கானாவில் இறக்கும் ஒவ்வொருவரின் உடலையும் உறவினர்களிடம் ஒப்படைக்கும் முன்னதாக கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறக்க்கும் ஒவ்வொரு நபரின் சடங்களையும் ஆய்வு செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. மேலும் இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவை நடைமுறைப்படுத்துவதிலும் கடும் சிக்கல் உள்ளது’’ என குறிப்பிடப்பட்டது.  இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கொரோனா பாதிப்பால் இறப்பவர்களின் சடலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்தது.

Tags : Telangana Supreme Court ,Supreme Court of High Court ,Telangana , Telangana Supreme Court, Supreme Court, Interim Prohibition
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து