×

விளையாட்டு விபரீதமானது வெடிமருந்து வெடித்து 2 சிறுவர் பரிதாப பலி: ஒருவர் படுகாயம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், பத்தேரி கோட்டக்குன்னு பகுதியை சேர்ந்தவர் சுந்தரவேல் முருகன். அவரது மகன் முரளி (16). பிளஸ் 1 மாணவர். பாலக்காடு மான்குறிச்சியை சேர்ந்தவர் லத்தீப். அவரது மகன் அஜ்மல் (14). 9ம் வகுப்பு படித்து வந்தார். அஜ்மல் பத்தேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில், 2 தினங்களுக்கு முன்பு முரளி, அஜ்மல் மற்றும் ஜலீல் என்பவரின் மகன் ஆகிய 3 பேரும் அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது, அந்த பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையின் பயன்படுத்தப்படாத ஒரு கிடங்கியில் வெடிமருந்து வைக்கப்பட்டிருந்தது. திடீரென சிறுவர்கள் விளையாட்டாக வெடிமருந்துக்கு தீ வைத்தனர். எதிர்பாராத விதமாக அது பெரியளவில் வெடித்து சிதறியதால், 3 சிறுவர்களும் அதில் சிக்கி படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள், 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவர்கள் மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அஜ்மல், முரளி ஆகியோர் இறந்தனர். மற்றொரு சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான். …

The post விளையாட்டு விபரீதமானது வெடிமருந்து வெடித்து 2 சிறுவர் பரிதாப பலி: ஒருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Sundaravel Murugan ,Patheri Kottakunnu ,Wayanad District, Kerala State ,Murali ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்