×

கொரோனா பேரிடரிலும் அரசியல் செய்யும் ஒரு ஆட்சி தமிழகத்தின் சாபக்கேடு: டி.ஆர்.பாலு கண்டனம்

சென்னை: திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., வெளியிட்ட அறிக்கை: “கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறி வருவதாக எங்கள் தலைவர் கூறுவது முற்றிலும் தவறானது” என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுவதற்குக் கொஞ்சமாவது தகுதி இருக்கிறதா என அவர் யோசித்துப் பார்க்க வேண்டும்.  “கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துங்கள்” என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஜனவரி 7ம் தேதியே எழுதிய கடிதத்தை தலைமாட்டில் வைத்துக் கொண்டு இன்றுவரை முழு வீச்சில் நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருப்பது யார்?.  

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், முதலமைச்சரும்தான். பத்திரிகையாளர்களுடனான காணொலிச் சந்திப்பில் அரசின் தோல்விகளை அடுக்கடுக்காக எங்கள் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் ஒன்றுக்குக் கூட இதுவரை அமைச்சர் விஜயபாஸ்கரோ, முதலமைச்சரோ பதில் சொல்ல முடியவில்லை. முழுக்க முழுக்க அரசியல் செய்து கொண்டு, அரசு கஜானாவை சுரண்டிக் கொண்டிருக்கும் ஒரு ஆட்சி தமிழகத்திற்கு சாபக்கேடு. இவர்கள் திமுகவைப் பார்த்து “அரசியல் செய்கிறார்கள்” என்று சொல்லும் தகுதி கிடையாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona ,Tamil Nadu ,state ,TR Baalu , Corona, political, TN, TR Baalu
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...