×

ராகுல் பற்றிய பொய்யான வீடியோ : ம.பி. முதல்வர் மீது வழக்கு; திக்விஜய் சிங் பேச்சு

போபால்: மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது காங்கிரஸ் அரசின் மதுக் கொள்கைக்கு எதிராக சிவராஜ் சிங் பேசினார். அந்த வீடியோ, தற்போது சில திருத்தங்களுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், `‘வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. மது அருந்துபவர்கள் போதுமான அளவு குடிக்கட்டும்’ என்று கூறுவதாக உள்ளது. இதுகுறித்து பாஜ. நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மபி. முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் உள்ளிட்ட 12 பேர் மீது நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019ல் நீமுச் பகுதியில் பேசிய கூட்டத்தில், மபி. முதல்வர் பூபேஷ் பாகல், சட்டீஸ்கர் முதல்வர் ஹூகம் சிங் கரடா என தவறுதலாக குறிப்பிட்டிருந்தார். இதனை கிண்டலடித்து சிவராஜ் சிங், `என்ன ராகுல், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாததால், மபி. முதல்வரை மாற்றி விட்டீர்களா? உங்களால் மட்டுமே ஒரு நொடியில் முதல்வரை மாற்ற முடியும் என்று அவரது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார். இந்நிலையில், ராகுல் பேசியது போன்ற பொய்யான வீடியோவை வெளியிட்ட முதல்வர் சிவராஜ் சிங் மீது, நேற்று பாஜ.வினர் புகார் அளித்த அதே காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.


Tags : CM ,Rahul , False video , Rahul, MP Case against, CM; Digvijay Singh Speech
× RELATED வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை பதிவு!