×

சில்லி பாயின்ட்...

* டோனி பேட்டிங் வரிசையில் 3வது வீரராகக் களமிறங்கி இருந்தால் ரன் குவிப்பில் ஏராளமான சாதனைகளை முறியடித்திருப்பார் என்று முன்னாள் நட்சத்திரம் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
* வீரர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டால், பந்தை பளபளப்பாக்க எச்சிலை உபயோகிக்க அனுமதிப்பது பற்றி யோசிக்கலாம் என்று முன்னாள் வேகம் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.
* தற்போதுள்ள வீரர்களில் உலக அளவில் மிகச் சிறந்த பீல்டர் என்றால் அது ரவீந்திர ஜடேஜா தான் என்று ஆஸி. நட்சத்திரம் ஸ்டீவன் ஸ்மித் பாராட்டி உள்ளார்.
* அசாம் அரசு தடகள வீராங்கனை ஹிமா தாஸ் பெயரை கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.
* மூன்று மாதங்களுக்கும் மேலாக வருமானம் இல்லாமல் தவிக்கும் கால்பந்து வீரர்கள், தங்களுக்கு பிபா நிதியுதவி அளித்து உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : player , dhoni , batting order, 3rd player, Gautam Gambhir
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...