×

முழு ஊரடங்கு உத்தரவுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு

சென்னை: அரசின் முழு ஊரடங்கு உத்தரவுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: பேரிடர் பொதுமுடக்கக் காலத்தில் தமிழக வணிகர்கள் அரசின் அனைத்து அறிவிப்புகள் மற்றும் ஆணைகளுக்கு உட்பட்டு, பொதுமக்கள் நலன் கருதி அனைத்து நடவடிக்கைகளிலும் அரசோடு இணைக்கமாக பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக அமைச்சரவை எடுத்துள்ள ஆய்வு கூட்ட முடிவில் பேரமைப்பு வலியுறுத்திய முழு ஊரடங்கிற்கு ஆதரவாக ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டிருப்பதை முழு மனதோடு வரவேற்கிறோம். அரசுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் அளிப்பதற்கு பேரமைப்பு கடமைப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களான பால், காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்படுவதற்கு அனைத்து வணிகர்களுக்கும் ஆதரவளித்து கொரோனா தொற்றுநோயை முழுமையாக தமிழகத்திலிருந்து  விரட்டுவதற்கு தங்களின் பேராதரவை அளித்திட வேண்டும். தமிழகத்தில் ஊரடங்கு முழுமையாக முடிவுக்கு வந்த பின்னர் அனைத்து தொழில் வணிக நிறுவனங்கள், கடைகள், டீக்கடை, உணவகம், திருமண மண்டபம், ஸ்டார் ஓட்டல், தங்கும் விடுதி, சுற்றுலாத்துறை ரிசார்ட்டுகள் என அனைத்துத் தொழில்களும் எப்போதும் போல அதிகாரிகளின் இடையூறுகள் இன்றி முழு சுதந்திரத்துடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்.


Tags : Merchant associations , Merchant associations,support , full curfew
× RELATED வணிகர்கள் ஜிஎஸ்டி கட்டணம் பதிவேற்றம்...