×

திருப்பதி கிளை சிறையில் கைதிக்கு கொரோனா தொற்று உறுதியானது

திருமலை: திருப்பதி கிளை சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. திருப்பதி கிளை சிறையில் மொத்தம் 72 கைதிகள் உள்ளனர். இங்குள்ள பி-பிளாக்கில் ஒரு கைதிக்கு திடீரென கடந்த 12ம் தேதி உடல்நலம் பாதித்தது. அவரை அரசு ரூயா மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன்முடிவு நேற்று வெளியானது. இதில் அந்த கைதிக்கு கொரோனா உறுதியானது.

தகவலறிந்த சிறைத்துறை நிர்வாகம் உடனடியாக அவருடன் ஒரே அறையில் இருந்த 5 கைதிகள் மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 14 சிறை ஊழியர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து சிறைத்துறையினர் கூறுகையில், ‘பிட்சாட்டூரைச் சேர்ந்த அந்த கைதிக்கு  தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். சிறை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் மற்ற கைதிகள் மற்றும் சிறை ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது’ என்றனர்.

Tags : branch jail ,inmate ,Tirupati ,prisoner , Coronavirus ,confirmed, prisoner , Tirupati branch jail
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...