×

சென்னை டாஸ்மாக் கடைகளில் காலாவதியாகும் 130 கோடி மதுபானங்கள்

சென்னை: ஊரடங்கு காரணமாக சென்னை டாஸ்மாக் கடைகளில் 130 கோடி மதிப்பிலான மதுபானங்கள் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 24ம் தேதி முதல் சென்னையில் 400க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டுள்ளதால் அந்த கடைகளில் உள்ள மதுபானங்கள் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு கடையிலும் லட்சக்கணக்கில் மதுபானங்கள் தேங்கியுள்ளன. இதனால், சுமார் 130 கோடி வரையிலான மதுபானங்கள் காலாவதியாகும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை 90 நாட்கள் மட்டுமே இருப்பு வைக்க முடியும். அதற்குள் அந்த மதுபானங்கள் விற்பனையாகவில்லை என்றால் அவை காலாவதியாகிவிடும். பின்னர், குடோன்களுக்கோ அல்லது தயார் செய்யும் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கோ அனுப்பி வைக்கப்படும்.

இந்தநிலையில், சென்னையில் உள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் மதுபானங்கள் தேக்கம் அடைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்றுடன் 83 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடிக்கிடக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் அந்த கடைகளில் உள்ள 130 கோடி மதிப்பினாலான மதுபானங்கள் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் பீர் பாட்டில்கள் வெடிக்கும். எனவே, மதுபானங்கள் அனைத்தையும் உடனடியாக குடோன்களில் வைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : task force ,breweries ,Chennai , Chennai, Task Shops, Brewery
× RELATED விருதுநகர் மக்களவை தொகுதி பாஜ தேர்தல்...