×

கொரோனாவை பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் பறிப்பு கொள்ளை நோயிலும் கொள்ளை அடிப்பதா?

* கட்டண விதிகளை மீறும் தனியார் மருத்துவமனைகளை அரசு ஏற்குமா?

மார்ச் மாதம் கைதட்டுங்கள்... பால்கனியில் விளக்கு ஏற்றுங்கள் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தபோது கூட மக்கள் பெரும் நம்பிக்கையுடன் இருந்தனர். கொரோனா கோ...என்று கோஷமிட்டதற்கு பணிந்து ஓடி விடும் என்று. ஆனால் நாட்கள் பல பீதியுடன் பயத்துடன் கடக்கும் போது தான் உண்மையின்  கோரமுகத்தை கண்டு கொரோனா சாதாரண  வைரஸ் அல்ல கொள்ளை  நோய் என்று அச்சத்தின் உச்சத்துக்கு சென்று மக்கள் உறைந்து கிடக்கின்றனர். எந்த வித வியாதியும் இல்லாதவர்களுக்கு பிரச்னை இல்லை என்ற  தைரியம் எல்லாம் போய் பயப்பட ஆரம்பித்தனர். அரசு மருத்துவமனைகளில் ஹவுஸ்புல் போர்டு தொங்கின; தனியார் மருத்துவமனைகளும் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற காருண்ய மனப்பான்மை சிறுது கூட இல்லாமல், ஈவு இரக்கம் இன்றி நடக்க ஆரம்பித்தன  என்று புகார்கள் கிளம்பின. மருந்தே இல்லாத வைரஸ் தொற்று என்று தெரிந்தும் கூட லட்சக்கணக்கில் பணம் பிடுங்கும் போது மக்கள் பலரும் வெறுத்தே போய் விட்டனர். ஒரு பக்கம்  அரசு மருத்துவமனைகளில் இடமில்லை என்று பிரச்னை; இன்னொரு பக்கம் தனியார் மருத்துவமனைகள் கொள்ளையோ கொள்ளை  என்று அரசுக்கு புகார்கள் அதிகரித்தன.

தனி மனிதர்களுக்கு அரசு தன் நிலத்தை இனாமாக, விலை  குறைவாக தருவதில்லை; ஆனால், அதிக அளவு இடத்தை தனியார் மருத்துவமனைக்கு தர காரணமே, மக்களுக்கு மேலான மருத்துவ சேவையை (அதனால் தான் வர்த்தகம் என்று வைக்கவில்லை; சேவை என்று வைத்துள்ளனர்) தருவதற்குத்தான். பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி ஏன் தனியார்  மருத்துவமனைகளை கையகப்படுத்தி, இலவச மருத்துவம் தரக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் வரை சொல்லி விட்டது. பல மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தி விட்டன. ஆனால், தமிழகம்? இதோ நான்கு கோணங்களில் சூடான அலசல்


Tags : millions ,corporation , looting,millions , corruption , corona?
× RELATED நாட்டின் மகள்கள் தோற்றனர்; பிரிஜ்...