×

பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் இரங்கல்


டெல்லி: பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். சுஷாந்தின் மறைவு அனைவருக்கும் இழப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார். 2018ம் ஆண்டு வெளியான தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார். 34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

Tags : Sushant Singh Rajput ,Amrinder Singh ,Punjab ,death , Bollywood actor Sushant Singh Rajput, late, Punjab Chief Minister Amrinder Singh
× RELATED பஞ்சாப் காங். மாஜி தலைவர் அகாலி தளத்தில் இணைந்தார்