×
Saravana Stores

பெட்ரோல், டீசல் விலை 7வது நாளாக அதிகரிப்பு: காங்கிரஸ் கடும் கண்டனம்

புதுடெல்லி: நாட்டில் தொடர்ந்து 7வது நாளாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 59 காசும், டீசல் 58 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 82 நாட்களாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வந்த நிலையில் கடந்த ஞாயிறு முதல் எண்ணெய் நிறுவனங்கள் விலையை  உயர்த்தி வருகின்றன.தொடர்ந்து ஏழாவது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 59 காசுகளும், டீசல் விலை  லிட்டருக்கு 58 காசுகளும் உயர்த்தப்பட்டது. கடந்த 7 நாட்களாக தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக பெட்ரோல் விலை 3.9ம், டீசல் விலை லிட்டருக்கு நான்கு ரூபாயும் கூடுதலாக  உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வானது அந்தந்த மாநிலங்கள் விதித்துள்ள உள்ளூர் விற்பனை வரி அல்லது வாட் வரியை பொருத்து அமையும்.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 74.57 ரூபாயில் இருந்து 75.16 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், டீசல் விலையும் 72.81 ரூபாயில்  இருந்து 73.39 ரூபாயாகவும் அதிகரித்துள்து.இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இக்கட்சி மூத்த தலைவரான கபில்சிபல், ஆன்லைன் மூலமாக நேற்று அளித்த பேட்டியில், ‘‘சர்வதேச கச்சா எண்ணெய் விலையானது குறைந்து  வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விலை குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை தற்போது வரை ராக்கெட்  வேகத்தில் உயர்ந்து வருகிறது. விலை குறைப்பின் பயனை நுகர்வோர்களுக்கு வழங்குவதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து  உயர்த்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம், கடந்த 6 நாட்களில் 44 ஆயிரம் கோடியையும், மார்ச் 5ம் தேதி முதல் இன்றைய தேதி வரையில் 2.5  லட்சம் கோடியையும் மத்திய அரசு ஈட்டியுள்ளது. நிறுவனங்கள் மற்றும் அரசு பயனடைவதற்கு பதிலாக சாமானிய மக்களிடம் சிறிதளவு கருணை  காட்டியிருந்தால் கூட, எரிபொருள் விலையை குறைத்து மக்களுக்கு பிரதமர் மோடி உதவி செய்திருப்பார்,’’ என்றார்.இந்த விலை உயர்வின் மூலம், கடந்த 6 நாட்களில் 44 ஆயிரம் கோடியையும், மார்ச் 5ம் தேதி முதல் இதுவரையில் ₹2.5 லட்சம் கோடியையும்  மத்திய அரசு ஈட்டியுள்ளது.

Tags : Congress , price ,gasoline ,diesel,consecutive, Congress
× RELATED இமாச்சல் காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு