×

அவசர எண்கள் 100, 112 திடீர் பழுது: புதிய எண்கள் அறிவிப்பு

சென்னை: காவல் கட்டுப்பாட்டு அவசர எண்கள் 100 மற்றும் 112 தற்காலிகமாக பழுதானதால் அதற்கு மாற்றாக காவல் துறை புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக போலீசாரை தொடர்பு கொள்ளும் வகையில் தமிழக காவல் துறையின் சார்பில் 100 மற்றும் 112 அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக பழுதாகி உள்ளது.  இதையடுத்து மக்கள் அவசர தேவைக்காக காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 100 மற்றும் 112 எண்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், அதற்கு மாற்றாக 044-46100100 மற்றும் 044-71200100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு தமிழக காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Numbers , Emergency Numbers 100, 112 Sudden Repair, New Numbers Announced
× RELATED ‘பெண்களின் செல்போன் எண்கள்...