×

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி வெளியே சென்ற 40 கொரோனா நோயாளிகள்; வழக்குப்பதிவு செய்தது சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் விதிகளை மீறி வெளியே சுற்றிய 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டோர் வீட்டைவிட்டு வெளியே சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். மேலும் வெளியே செல்பவர்களையும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களையும் மையங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வருவதாகவும், அவர்களால் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், இந்த புகார்கள் உறுதிப்படுத்தப்பட்டு சுமார் 40 நோயாளிகள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளன. மேலும், தமிழகம் முழுவதும் 80%திற்கும் மேற்பட்டோர் அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் ஆவர். அவ்வாறு அறிகுறி இல்லாமல் கொரோனா பாதித்தவர்கள் வீடுகளில் சுயதனிமையில் இருக்கவும், வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என்றும் வழிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், அந்த தடையை மீறி கொரோனா தொற்று பாதித்தவர்கள் வெளியே வருவது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களின் விவரம்;

* திருவொற்றியூர் - 4 பேர்

* மணலி - 1 நபர்

* மாதவரம் - 1 நபர்

* தண்டையார் பேட்டை - 7 பேர்

* ராயபுரம் - 7 பேர்

* திருவிக நகர் - 1 நபர்  

* அம்பத்தூர் - 1 நபர்

* அண்ணாநகர் - 3 பேர்

* தேனாம்பேட்டை - 3 பேர்

* கோடம்பாக்கம் - 3 பேர்

* வளசரவாக்கம் - 3 பேர்

* அடையார் - 2 பேர்

* பெருங்குடி - 2 பேர்

* சோழிங்கநல்லூர் - 2 பேர்

Tags : Corporation of Madras ,Corona ,Madras. , Isolation Rule, Corona, Litigation, Madras Corporation
× RELATED மே 7 முதல் இ-பாஸ் உத்தரவு எதிரொலி...