×

10ம் வகுப்பு தேர்வு ரத்து எதிரொலி: வருகை பதிவேடுகளை பள்ளிகள் ஒப்படைக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து பள்ளிகள் வருகைப் பதிவேடுகளை உடனடியாக மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டு இருந்த 10 வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுகள் முற்றிலுமாக ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த தேர்வு எழுத பதிவு செய்திருந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் அரசு தெரிவித்தது. மாணவர்களின் தேர்ச்சிக்கு, மாணவர்கள் வருகை, காலாண்டு அரையாண்டுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. இதையடுத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் படித்த மாணவர்களின் வருகைப்பதிவேடுகள், மதிப்பெண் பட்டியல்களை ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவு: அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த தலைமை  ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் படித்து பொதுத் தேர்வு எழுத பதிவு செய்திருந்த அனைத்து மாணவர்களின் 2019-20ம் கல்வி ஆண்டுக்கான வருகைப் பதிவேடுகள், 21.3.20 தேதி வரை முழுமையாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து ஒப்படைக்க வேண்டும்.
மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளில் பிளஸ் 1 படித்து  வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடத் தேர்வுகளை எழுத பதிவு செய்திருந்த அனைத்து மாணவர்களின் வருகைப் பதிவேடுகளையும் 12ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், பிற துறை சார்ந்த பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், மாணவர்களின் வருகைப் பதிவேடுகளையும் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகைப் பதிவேடுகளில் கடைசிப் பக்கத்தில் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், கையொப்பமிட்டு மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதை பெற்றுக் கொள்ளும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கடைசி பக்கத்தில் கையொப்பமிட வேண்டும்.



Tags : Schools ,Icort ,Exam Cancellation , Cancellation of 10th Class Examination, Records, Schools, Icord
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...