×

மீன் வியாபாரி கொலை வழக்கு முக்கிய குற்றவாளி கோர்ட்டில் சரண்

ஆவடி: அயப்பாக்கம் மீன் வியாபாரி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி அரியலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். ஆவடி அடுத்த அயப்பாக்கம், அன்னை அஞ்சுகம் நகர், பாட்டாளி குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (32).  மீன்வியாபாரி.  இந்நிலையில் கடந்த 5ம்தேதி பாண்டியனை பாட்டாளி தெருவில் வைத்து 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தனர்.  இது குறித்து திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் பாண்டியனுக்கு முன்விரோதம் இருந்துள்ளது.

இப்பிரச்சனையில், கார்த்திக் ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பன்னீர் (35) இருந்துள்ளார். இதனையடுத்து, பாண்டியனை,  பன்னீர் தலைமையில் கூட்டாளிகள் அழைத்து சென்று வெட்டிக்கொலை செய்தனர் என்பது தெரியவந்தது.  
இதனையடுத்து, போலீசார் இந்த வழக்கு தொடர்பாக பெரம்பூர், ராஜிவ்காந்தி நகரைச் சார்ந்த சிவலிங்கம் (28), அயப்பாக்கம் அன்னை அஞ்சுகம் நகரைச் சேர்ந்த பிரசாந்த்குமார் (26), அவரது தம்பி கார்த்திக் (24) ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக, அயப்பாக்கம், அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த பாண்டியன் (31) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி பன்னீர் என்பவர் அரியலூரில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரண் அடைத்தார். இதனை அடுத்து, நீதிபதியின் உத்தரவின் பேரில் அவரை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Saran , main culprit , fish dealer, murder case , Saran
× RELATED அம்பத்தூர் பேருந்து நிலையம் ₹12...