×

கொரோனா பாதித்தால் மாற்று வீரர் களமிறங்கலாம்: ஐசிசி அனுமதி

துபாய்: டெஸ்ட் போட்டிகளின்போது எந்த வீரருக்காவது கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால், அவருக்கு பதிலாக மாற்று வீரரைக் களமிறக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து ஐசிசி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  டெஸ்ட் போட்டிகளின்போது எந்த ஒரு வீரருக்காவது கோவிட்-19 நோய் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால், அந்த வீரருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்க அணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பவுன்சர் பந்துவீச்சு தாக்குதலால் பாதிக்கப்படும் பேட்ஸ்மேனுக்கு பதிலாக தேர்வு செய்யப்படும் மாற்று வீரருக்கு போட்டி நடுவர் ஒப்புதல் அளிக்கும் நடைமுறையே இதிலும் பின்பற்றப்படும்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கொரோனா மாற்று வீரருக்கு அனுமதி இல்லை. பந்தை பளபளப்பாக எச்சிலை உபயோகிக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடைக்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. விமானப் போக்குவரத்தில் சிக்கல்கள் நீடிப்பதால், டெஸ்ட் போட்டிகளில் பொது நடுவரை நியமிப்பது சிரமம். எனவே, இருதரப்பு தொடர்களில் மீண்டும் உள்ளூர் நடுவர்களை பணியமர்த்த அனுமதிக்கப்படும். இவ்வாறு ஐசிசி தெரிவித்துள்ளது. அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.


Tags : Coroner ,ICC , Coroner , alternate player, ICC, clearance
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...