×

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் தேர்தல்

சென்னை: தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர்,  மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு வக்பு வாரிய விதிகள்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் முன்னாள் பார்கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் தகுதியுள்ள முத்தவல்லிகளின் பட்டியல் பெறப்பட்டு, தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்துவதற்கு வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம் உறுப்பினர்களுக்கான தேர்தல் குறித்த வரைவு வாக்காளர் பட்டியலின் நகலை தமிழ்நாடு வக்ப் வாரியம், எண்.1, ஜாபர் சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை. அனைத்து மண்டல வக்பு கண்காணிப்பாளர்களின் அலுவலகங்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்  நலத்துறை, தலைமைச் செயலகம்,  சென்னை-9ன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் உள்ளிட்ட இடங்களிலுள்ள அறிவிப்பு பலகைகளில் பார்வைக்காக வெளியிடப்படும்.

Tags : Wakpu ,Tamil Nadu ,Board Member Election , Tamil Nadu, Wakpu Board Member, Election
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...