×

சென்னையில் பலி எண்ணிக்கை 223 ஆக உயர்வு: ராயபுரத்தில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா: தண்டையார்பேட்டை 3 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: சென்னை மாநகராட்சியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூன் 8ம் ேததி வரை சென்னையில் 23,298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 11,265 பேர் குணமடைந்துள்ளனர். 223 பேர் உயிரிழந்துள்ளனர். 11,437 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களைச் சேர்ந்த சேர்ந்த 373 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 60.03 சதவீதம் ஆண்கள், 39.97 சதவீதம் பெண்கள். இவர்களில் 49.1 சதவீதத்தினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 50 சதவீதத்தினர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 0.9 சதவீதத்தினர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மண்டலம் வாரியாக ராயபுரத்தில் 4,023 பேர், தண்டையார்பேட்டையில் 3,019 பேர், தேனாம்பேட்டையில் 2,646 பேர், கோடம்பாக்கத்தில் 2,539 பேர், திருவிக நகரில் 2,273 பேர், அண்ணாநகரில் 2,068 பேர், அடையாறில் 1,325 பேர், வளசரவாக்கத்தில் 1,058 பேர், அம்பத்தூரில் 828 பேர், திருவொற்றியூரில் 870 பேர், மாதவரத்தில் 650 பேர், பெருங்குடியில் 421 பேர், சோழிங்கநல்லூரில் 420 பேர், ஆலந்தூரில் 412 பேர், மணலியில் 343 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வயது வாரியாக, ஆண்களில் 9 வயது வரை உள்ள 420 குழந்தைகள், 10 முதல் 19 வயதுள்ள 880 பேர், 20 முதல் 29 வரை வயதுக்கு உட்பட்ட 2579 பேர், 30 முதல் 39 வரை வயதுக்கு உட்பட்ட 2994 பேர், 40 முதல் 49 வயதுக்குட்பட்ட 2676 பேர், 50 முதல் 59 வயதுக்குட்பட்ட 2251 பேர், 60 முதல் 69 வயதுவரையுள்ள 1201 பேர், 70 முதல் 79 வயது வரையுள்ள 574 பேர், 80 வயதுக்கு மேற்பட்ட 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பெண்களில் 9 வயது வரை உள்ள 414 குழந்தைகள், 10 முதல் 19 வயதுள்ள 720 பேர், 20 முதல் 29 வரை வயதுக்கு உட்பட்ட 1952 பேர், 30 முதல் 39 வரை வயதுக்கு உட்பட்ட 1761 பேர், 40 முதல் 49 வயதுக்குட்பட்ட 1624 பேர், 50 முதல் 60 வயதுக்குட்பட்ட 1416 பேர், 60 முதல் 69 வயதுவரையுள்ள 819 பேர், 70 முதல் 79 வயது வரையுள்ள 315 பேர், 80 வயதுக்கு மேற்பட்ட 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Chennai ,Royapuram , Corona, chennai
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...