×

அடிப்படை கல்வி ஆசிரியர்கள் நியமனம்: உத்தர பிரதேசத்தின் வியாபம் முறைகேடு: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘உத்தர பிரதேசத்தின் வியாபம்’ முறைகேடு ஆசிரியர் பணி நியமன விவகாரம் என்று காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் வியாபம் முறைகேட்டில் கடந்த 2007ம் ஆண்டில் நுழைவுத் தேர்வு, அரசுப் பணியாளர் நியமனத்தில் 2,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் அரசு பணியாளர்களுக்கான தேர்வு கடந்தாண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. அதன் முடிவுகள் இந்தாண்டு மே 12ம் தேதி வெளியானது. இதன் அடிப்படையில் 69,000 ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில் முறைகேடு நடந்திருப்பதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வழக்கில் தவறு நடந்திருப்பதாக கூறிய அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜூன் 3ம் தேதி இந்த பணி நியமனத்தை நிறுத்தி வைத்தது.  
மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்பு 45 சதவீதமாக இருந்த பொதுப் பிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண் ஏன் 40 சதவீதமாக குறைக்கப்பட்டது. எதன் அடிப்படையில் இந்த பணி நியமனம் நடைபெற்றது என்பது குறித்து மாநில அரசு மே 21ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா நேற்று டிவிட்டர் பதிவில், ``இந்த பணி நியமனத்தில் உண்மையில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஊழலில் தொடர்புடையதாக டைரியில் பெயர் இடம் பெற்றுள்ள மாணவர்கள், பண பரிவர்த்தனை, தேர்வு மையங்களில் உள்ள வேறுபாடுகள் ஆகியவற்றுக்கும் இதற்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. 69,000 ஆசிரியர்கள் பணி நியமனம் உபி.யின் வியாபம் ஊழல்’’ என்று கூறியுள்ளார்.

Tags : Priyanka Gandhi ,teachers ,Uttar Pradesh Education , Education teachers, appointment, Priyanka Gandhi, indictment
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!