×

ஆர்சனிக் ஆல்பம் 30சி மருந்தால் எந்த பாதிப்பும் வராது குழந்தை முதல் சர்க்கரை நோயாளிகள் வரை எவரும் தைரியமாக எடுத்து கொள்ளலாம்

* ஓமியோபதி மருத்துவ கவுன்சில் தலைவர் ஞானசம்பந்தம் விளக்கம்

சென்னை: ஆர்சனிக் ஆல்பம் 30சி மருந்தால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. பிறந்த குழந்தைகள் முதல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் வரை யாராக இருந்தாலும் தைரியமாக எடுத்துக் கொள்ளலாம் என்று ஓமியோபதி மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் ஞானசம்பந்தம் தெரிவித்துள்ளார்.   ஓமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் 30சி எனும் மருந்து சர்க்கரை நோய்  உள்ளவர்களுக்கும் சிறுநீரக தொற்று உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று  மருத்துவர் பிரதீப் கவுர் கூறியதையடுத்து அது முற்றிலும் தவறானது என்று ஓமியோபதி மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் ஞானசம்பந்தம் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஆர்சனிக் ஆல்பம் 30சி எனும் மருந்து சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், பிறந்த குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், சிறுநீரக தொற்று உள்ளவர்களை பாதிக்கும் என்று கூறுகின்றனர். ஓமியோபதி மருந்து குறித்து ஓமியோபதி மருத்துவர்கள் கூறினால் சரியாக இருக்கும். மேலும் ஆய்வுக் கட்டுரையை படித்து விட்டு அதில் உள்ள கருத்தை தெரிவிப்பது தவறில்லை. ஆனால் ஆர்சனிக் ஆல்பம் 30சி மருந்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என சொல்வதை ஏற்க இயலாது. ஆர்சனிக் ஆல்பம் 30சி என்ற மருந்து எடுத்துக் கொண்ட நோயாளிகளுக்கு நல்ல பலன் கொடுத்திருக்கிறது.

இந்த மருந்தை எடுப்பதால் எள்ளளவும் பாதிப்பு ஏற்படாது. பிறந்த குழந்தைகள் முதல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் வரை யாராக இருந்தாலும் இந்த மருந்தை தைரியமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் ரத்தத்தில் கலக்காமல் நேரடியாக நரம்பு மூலம் இந்த மருந்தை எடுத்து செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுவுள்ளது. தமிழகம் முழுவதும் 30 லட்சத்திற்கும் அதிகமான மருந்து வழங்கப் பட்டுள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்றும், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். நிச்சயம் இதன் மூலம் எந்த பாதிப்பும் வராது. இதுபோன்ற போர்க்காலத்தில் நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. ஆனால் ஒருவருக்கொருவர் காழ்ப்புணர்ச்சியோடு இந்த தருணத்தில் நாம் இருக்கக்கூடாது.

மேலும் ஆர்சனிக் ஆல்பம் மூலப்பொருட்களாக அளிக்கப்படவில்லை. இதனுடைய ஒரு சிறுபகுதி பன்மடங்கு வீரியம் செய்யப்பட்டு 30சி என்ற அளவில் அளிக்கப்படுவதால் பாதிப்பு ஏற்படாது. பிறந்த குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் எந்தநோய் பாதிக்கப்பட்டிருந்தாலும் தைரியமாக எடுத்துக் கொள்ளலாம். எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று விளக்கம் அளித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஆர்சனிக் ஆல்பம் பற்றி 1973ம் ஆண்டிலேயே இந்திய மருத்துவ பார்மகோபியாவில் 58வது பக்கத்தில் ஆர்சனிக் ஆல்பம் எப்படி சாப்பிட வேண்டும், யாரெல்லாம் சாப்பிடலாம், எந்த நோய் உள்ளவர்கள் என்ன அளவு சாப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கு பிரதீப் கவுர் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

Tags : baby ,anyone ,Diabetics , Arsenic Album ,30C Drugs , Safely Taken , Baby to Diabetics
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி