×

கொரோனாவை காரணம் காட்டி பகிரங்க வேட்டை கல்வி கட்டண வசூலில் இறங்கும் தனியார் பள்ளிகள்

* கடனாளியாகி தத்தளிக்கும் பெற்றோர்கள்
* எதிர்காலம் கேள்விக்குறியான மாணவர்கள்

கொரோனா - மூன்று மாதமாக எல்லாரையும் நிலைகுலைய வைத்துள்ளது; பள்ளிப்படிப்பை முடித்து எதிர்காலத்துக்கு குடும்ப பொருளாதாரத்ைத சுமப்பார்கள்  பிள்ளைகள் என்று தன் சேமிப்பையெல்லாம் கொட்டி, போதாக்குறைக்கு கடனையும் வாங்கி படிக்க வைத்த பெற்றோர்களுக்கு இந்த வைரஸ் அரக்கன், அவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கி விட்டது. 80 சதவீதத்துக்கு மேல் பெற்றோர்கள் கடனாளியாகி விட்டனர். இப்போது பிள்ளையின் கல்விக் கட்டணத்தையும் இஎம்ஐ தவணையில் கட்டும் துர்பார்க்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களிடம் வாங்கித்தானே பள்ளியை நடத்துகிறோம்; ஆசிரியர்களுக்கும் வாழ்வாதாரம் இருக்கிறது; அவர்களை நாங்கள் தானே கவனிக்க வேண்டும் என்பது தனியார் பள்ளிகளின் நியாயப்படுத்தும் காரணம் என்றாலும், எல்லா பெற்றோர்களையும் ஒட்டுமொத்தமாக பிழிவது கண்டிக்கத்தக்கது தான்.

பள்ளிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என்று சொல்லும் அரசு, அப்படி கட்டாயப்படுத்தாமல் இருக்கிறதா என்று வழக்கம் போல கண்காணிப்பதே இல்லை. தனியார் பள்ளி மோகம் வருங்காலத்தில் சரிந்து விடும். இதை உணர்ந்து அரசு பள்ளிகள் தரம் உயர்த்தி, எண்ணிக்கை உயர்த்த அரசு தயாராக இருக்கிறதா  என்றால் அதுவும் பெரும் கேள்விக்குறி. மாணவர்கள் குறைவான பள்ளிகளை குறைப்பது நடந்து ெகாண்டு தான் இருக்கிறது.   வசதிக்கு  ஏற்ப கல்வி என்பது இலவச கல்வி சட்டத்தை கேலி செய்வது போலத் தெரியவில்லையா என்பது தான் சாமான்ய பெற்றோரின் கேள்வி. அரசு போட்ட கட்டுப்பாடுகள், உத்தரவுகள் எல்லாம் தனியார் பள்ளிகள் உதாசீனப்படுத்தி வருவது போல இந்த கட்டண வசூல் வேட்டையிலும் கண்டுகொள்ளவே இல்லை. புகார் தந்தால் நடவடிக்கை என்கிறார்கள். ஆனால் புகார் தருபவரின் பிள்ளைகளை அதற்கு முன் பள்ளியை விட்டு நீக்கி விடுவது தான் இதுவரை நடந்துள்ளது. வியாபார கல்வியை அரசே ஊக்குவிப்பது அழகல்ல. இதோ நான்கு கோணங்களில் ஓர் அலசல்:

Tags : schools , Private schools,charging ,public hunting ,tuition due to corona
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்